கிள்ளானில் இந்திய ஆடவர் சுட்டுக் கொலை! பெட்ரோல் நிலையத்தில் பயங்கரம்

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

கிள்ளான், நவ 8: கிள்ளான் புக்கிட் திங்கி பெட்ரோல்நிலையத்தில் மலேசிய இந்திய ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நேற்று இரவு நடந்த இச்சம்பவத்தால் அவ்வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சம்பந்தப்பட்ட நபரை சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

முழு விவரம் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *