205 கடப்பிதழ்கள் வைத்திருந்ததாக இந்திய மாது மீது குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

ஷாஆலம், ஆக. 9-

இருநூற்று ஐந்து மலேசியக் கடப்பிதழ்கள், மூன்று நபர்களின் அடையாள அட்டைகள், ஒரு போலி மைகாட் அட்டை போன்றவற்றைத் தன்வசம் வைத்திருந்ததாக சுமத்தப்பட்ட மூன்று குற்றங்களை நாற்பத்தோரு வயதான இல்லத்தரசி ஒருவர் ஷாஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று மறுத்தார்.

மாஜிஸ்திரேட் ஷாபிக் சுலைமான் முன்னிலையில் அக்குற்றங்கள் சுமத்தப்பட்டபோது அவற்றை மறுப்பதாக என். பார்வதி எனும் அந்த இல்லத்தரசி தெரிவித்தார். மொத்தம் 205 கடப்பிதழ்களை வைத்திருந்ததாக அவர் மீது முதல் குற்றம் சுமத்தப்பட்டது. இருபத்து நான்கு வயதுடைய ஒருவரின் பெயரைக் கொண்ட போலி மைகாட் அட்டையை வைத்திருந்ததாக இரண்டாவது குற்றமும்

19.21 மற்றும் 31 வயதுடைய மூன்று ஆடவர்களின் மைகாட் அட்டைகளை வைத்திருந்ததாக மூன்றாவது குற்றமும் சுமத்தப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி அதிகாலை 12.10 மணியளவில் பூச்சோங், தாமான் பூச்சோங் ஹர்த்தாமாஸ் எனும் இடத்தில் உள்ள அடுக்ககமொன்றில் அக்குற்றங்களை அவர் புரிந்தததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பார்வதியை பதினைந்தாயிரம் வெள்ளி பிணையுறுதியில் விடுவிக்க மாஜிஸ்திரேட் அனுமதியளித்தார். செப்டம்பர் 22ஆம் தேதியன்று இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. பார்வதியை வழக்கறிஞர் யோகமணி எம். மாரப்பன் பிரதிநிதித்தார். அரசுத் தரப்பில் டிபிபி நோர்ஹிடாயா அப்துல்லா சானி முன்னிலையானார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *