தேசபக்தியைப் பிரதிபலிக்கும் வகையில் பூர்வகுடியினரின் மலேசிய தினக் கொண்டாட்டம்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

பந்திங், செப்.16-

நாட்டில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள கேரித்தீவு சுங்கை பும்புன் பூர்வகுடியினரின் தேசபக்தியைப் பிரதிபலிக்கும் வகையில் மலேசிய தினக் கொண்டாட்டம் நேற்று முன்தினம் அதன் தலைவர் தோக் பத்தின் அஸ்மான் சாப் தலைமையில் பல்வேறு போட்டி விளையாட்டுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

அழைப்பின் பேரில் பூர்வகுடி கிராமத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பங்கேற்ற கோலலங்காட் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினர்களான உமாநந்தினி ஞானப்பிரகாசம் மற்றும் தனபாலன் வேலு, கயிறு இழுக்கும் போட்டி, கண்ணைக் கட்டிக் கொண்டு ஓடுதல், வர்ணம் தீட்டுதல் போன்ற போட்டி நிகழ்ச்சிகளை வழி நடத்தியதோடு வெற்றியாளர்களுக்கு நிகழ்ச்சி நிறைவில் பரிசுகளை எடுத்து வழங்கி அவர்களை
வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பூர்வகுடி இன பாலர் பள்ளி மாணவர்களும் ஜாலூர் கெமிலாங் கொடிகள் கொண்ட படங்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளை வென்றதாக உமாநந்தினி தெரிவித்தார். காட்டு வளப்பத்தையே நம்பி தங்களது உழைப்பை வழங்கி வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி வரும் பூர்வகுடி மக்கள் மலேசிய தினத்தை ஆர்வத்துடன் கொண்டாடி மகிழ்ச்சியில் திளைத்ததை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிந்து தாம் பெருமிதம் அடைந்ததாக மலேசிய தின வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *