இந்தோ. உணவுப்பொருட்களில் பன்றியின் மரபணுக்கள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 23-

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல உணவுப்பொருட்களில் பன்றியின் மரபணுக்கள் இடம்பெற்றிருப்பது பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அப்பொருட்கள் அனைத்தும் விற்பனைச் சந்தைக்கு வராமல் இருப்பதை உறுதிசெய்யும்படி இஸ்லாமிய மேம்பாட்டுத்துறை (ஜாக்கிம்) உத்தரவிட்டுள்ளது.

அந்த உணவுப்பொருட்கள் ஹலால் தரப்பாடுகளை மீறியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே,சந்தைகளிலிருந்து அப்பொருட்களை அகற்றுவதற்கு ஆவன செய்யும்படி இறக்குமதியாளர்களை வலியுறுத்தியிருக்கிறோம் என்று ஜாக்கிமின் தலைமை இயக்குநர் சிராஜுடின் சுஹாய்மி குறிப்பிட்டார்.

ஒன்பது உணவுப்பொருட்களைக் கொண்டிருக்கும் பதினோரு தொகுப்புகளில் பன்றியின் மரபணுக்கள் (டிஎன்ஏ) இடம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அவற்றைச் சந்தையிலிருந்து மீட்டுக் கொள்ளும்படி இந்தோனேசியாவின் ஹலால் பொருள் உத்தரவாத முகமை அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஜாக்கிம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

Beberapa produk makanan diimport dari Indonesia didapati mengandungi DNA babi. JAKIM mengarahkan produk tersebut tidak dijual di pasaran dan menegaskan ia melanggar piawaian halal. Importir diminta menarik balik produk terbabit dengan segera.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *