இந்தோனேசிய ஹெலிகாப்டர் விபத்து மலேசிய முக்கியப் புள்ளி பலி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 18: இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில்  வியாழக்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மலேசியர், கோலாலம்பூர் கெப்போங் குழுமத்தின் முன்னாள் தோட்டத்துறை இயக்குநரான பேட்ரிக் கீ ஆவார் என டாங்கா பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பக்ரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் கெப்போங் பெர்ஹாட் (KLK) நிறுவனத்தில் பணியாற்றியபோது கீயின் தலைமையின் கீழ் பணியாற்றியதாக அவர் கூறினார்.

அவர் ஒரு மரியாதைக்குரிய தலைவர். அவரது அர்ப்பணிப்பு, ஞானம் மற்றும் ஈடுபாடு ஆகியவை அவருடன் பணியாற்றிய பலரின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின என்று பக்ரி தனது முகநூல் அஞ்சலியில் குறிப்பிட்டார்.

அந்த ஹெலிகாப்டரில் பயணித்த ஆறு பயணிகளில் மலேசியரும் ஒருவர் என இந்தோனேசியாவின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
 
மேத்யூ ஏர் நுசந்தாரா நிறுவனத்தால் இயக்கப்படும் அந்த ஹெலிகாப்டர், உள்ளூர் நேரப்படி காலை 7.34 மணிக்கு மெலவி ரீஜென்சியிலிருந்து புறப்பட்டு, குபு ராயா ரீஜென்சிக்குச் செல்லும் வழியில் காலை 8.39 மணியளவில் தொடர்பை இழந்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *