தாதியர் பற்றாக்குறையைத் தீர்க்க இந்தோனேசியா முன்வந்துள்ளது!
- Muthu Kumar
- 06 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 6-
சுகாதாரத் துறைகளில் நிலவும் ஆள்பலப் பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் வகையில், மலேசியாவில் வேலை செய்ய இந்தோனேசிய தாதியர்களை அனுமதிக்கும் பரிந்துரை ஒன்றை, ஜொகூர் பாருவில் உள்ள இந்தோனேசிய தூதரக அதிகாரி ஒருவர் முன்மொழிந்துள்ளார்.
இந்தோனேசியாவில் அதிக எண்ணிக்கையில் தாதியர்கள் இருக்கும் வேளையில், மலேசியாவில் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால், இப்பரிந்துரை இரண்டு நாடுகளுக்கும் பலனளிக்கும் என்று சிகிட் எஸ். விடியாந்தோ என்ற அந்த அதிகாரி கூறியுள்ளார். மலேசியாவும் இந்தோனேசியாவும் ஒரே மாதிரியான மொழியையும் கலாச்சாரத்தையும்
கொண்டிருப்பதால், மலேசியாவில் வசிக்க இந்தோனேசிய தாதியர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசிய தாதியர்கள் ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏற்கெனவே பணியாற்றி இருப்பதன் மூலம் அனுபவங்களைக் கொண்டிருப்பதால், தாங்கள் சார்ந்துள்ள மருத்துவத் துறைகளில் அவர்கள் மிகவும் தகுதிப் பெற்றிருப்பதாக சிகிட் கூறியுள்ளார்.
இந்தோனேசிய தாதியர்களினால் மேற்கூறப்பட்ட நாடுகளில் வேலை செய்ய முடியும்போது, மலேசியாவிலும் அவர்களால் அத்துறையில் பணியாற்ற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்..
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



