ஒரு வயது பெண்குழந்தை துன்புறுத்தப்பட்டு மரணம்-தாயும் காதலனும் கைது!

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, ஜூலை 8-

பதினைந்து மாதப் பெண்குழந்தையொன்று தன்னுடைய தாயினாலும் அவளின் காதலனாலும் துன்புறுத்தப்பட்டதால் மரணமடைந்துள்ளது.மலாக்காவின் அலோர்காஜாவில் உள்ள கடை வீடொன்றில் நேற்று முன்தினம் இரவு அச்சம்பவம் நிகழ்ந்தது.

கயநினைவின்றி இருந்த அக்குழந்தையை இருபத்து நான்கு வயதுடைய தாய் இரவு 11 மணிக்கு தம்பின் மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளாள். அந்த குழந்தையினுடைய உடலின் பல பாகங்களில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டிருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது.

தம்பினில் உள்ள தங்களின் வீட்டிலிருந்து அக்குழந்தையை பூலாவ் செபாங்கில் உள்ள தன்னுடைய காதலனின் கடைவீட்டுக்கு அப்பெண் நேற்றுமுன்தினம் மாலை 6.30மணிக்கு கொண்டு வந்துள்ளார்.

பத்து மணியளவில் குழந்தையை படுக்கையில் கிடத்தி விட்டு உணவு வாங்குவதற்காக அப்பெண் வெளியே சென்றுள்ளார். அப்போது அவளின் காதலனும் அங்கு இருந்துள்ளான். அரை மணிநேரத்திற்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பியபோது குழந்தை மூச்சுப் பேச்சின்றி இருந்தது. அதனைத் தொடர்ந்து அக்குழந்தையை தாயும் காதலனும் தம்பின் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

காயங்கள் காரணமாக குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று அப்பெண் கூறிக்கொண்டாள்.இதனிடையே, அவர்கள் இருவரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Seorang bayi perempuan berusia 15 bulan maut akibat didera oleh ibunya dan teman lelaki ibu di sebuah rumah kedai di Alor Gajah, Melaka. Bayi itu dihantar ke hospital dalam keadaan tidak sedarkan diri dengan kesan lebam di badannya. Dua suspek ditahan untuk siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *