ஈப்போவில் கார் சறுக்கி விழுந்ததில் ஒருவர் பலி!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, செப் 10: ஈப்போ, ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷாவில் உள்ள ஒரு தளபாடக் கடையின் முன் நிகழ்ந்த விபத்தில் கார் சறுக்கி கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த ஒருவர் பலியானார். அவரது மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

விபத்து குறித்து காலை 8.06 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒன்பது பணியாளர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல் உதவி இயக்குநர் ஷாஸ்லீன் முகமட் ஹனாஃபியா கூறினார்.

55 வயதான அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக சுகாதார அமைச்சக ஊழியர்கள் உறுதிப்படுத்தினர்.

48 வயதான அவரது மனைவிக்கு, லேசான காயங்கள்  ஏற்பட்டன.மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு அவருக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் ஹைட்ராலிக் உபகரணங்களைப் பயன்படுத்தி அகற்றப்பட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *