மலாக்கா மறுசுழற்சி மையத்தில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் பலி!
- Shan Siva
- 14 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 14 – மலாக்கா, புக்கிட் ரம்பாய் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஒரு கழிவு மறுசுழற்சி மையத்தில் இன்று நடந்த வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் 1.30 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் 44 வயதுடைய நபர், உடலின் 90 சதவீதம் தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பொது தொடர்பு அதிகாரி ஹஃபிட்சதுல்லா ரஷீத் கூறினார்.
மேலும், 32 வயதுடைய மற்றொரு நபர், உடலின் 5 சதவீதம் தீக்காயம் அடைந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மதியம் 1.32 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, தங்கா பத்து தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்புக் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. சுமார் ஆறு நிமிடங்களில் குழு சம்பவ இடத்தை அடைந்ததாகவும் அவர் கூறினார்.
மீட்பு குழு வருகையின்போது, வெல்டிங் இயந்திரம் தொடர்பான வெடிப்பு நிகழ்ந்திருந்தது தெரியவந்தது. விஷ வாயுக்களை கண்காணித்து கட்டுப்படுத்த Hazmat குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. வாயு கண்டறியும் கருவிகளின் அளவீடுகள் பாதுகாப்பான நிலையில் குறைவாகவே இருந்ததாக குழுத் தலைவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் தொழிற்சாலை தீ ஏற்படவில்லை. மேலும் மீட்பு நடவடிக்கைகள் மதியம் 2.27 மணிக்கு நிறைவடைந்தன என்றும் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



