மூன்று வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் ஒருவர் பலி; எழுவர் காயம்!

- Muthu Kumar
- 08 Jun, 2025
தானா மேரா, ஜூன் 8-
நேற்று, கிளந்தான், தானா மேரா, கம்போங் ராவா பேச்சா லாவுட்டில் மூன்று வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த வேளையில், மூன்று சிறார்கள் உட்பட எழுவர் காயமடைந்தனர். அவ்விபத்து குறித்து, நேற்று நள்ளிரவு மணி 12.28 அளவில் தமது தரப்பிற்கு அவசர அழைப்பு கிடைத்ததாக தானா மேரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு கமாண்டர், முதலாவது மூத்த தீயணைப்பு அதிகாரி, ரொஸ்லான் இஸ்மாயில் தெரிவித்தார்.
பெரோடுவா மைவி, அக்ஸியா, தொயோத்தா அல்ஃபார்ட் ரக கார்களை உட்படுத்தி
அவ்விபத்து நிகழ்ந்ததாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் ரொஸ்லான் இஸ்மாயில் குறிப்பிட்டிருந்தார். பெரோடுவா அக்ஸியா ரக காரை செலுத்திய ஆடவர் அதில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மைவி ரக காரில் பயணித்த ஒருவரும் தொயோத்தா அல்ஃபார்ட் ரகக் ரகக் காரில் பயணித்த அறுவரும் காயமடைந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.அவர்களை மீட்கும் பணிகள், பின்னிரவு மணி 1.55 அளவில் நிறைவடைந்தது. காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக, தானா மேரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
Seorang maut dan tujuh cedera, termasuk tiga kanak-kanak, dalam kemalangan melibatkan tiga kenderaan di Kampung Rawa Peci, Tanah Merah. Mangsa yang maut tersepit dalam Perodua Axia. Semua mangsa cedera dihantar ke Hospital Tanah Merah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *