வன்முறை தாக்குதல்களை நிறுத்துவீர்-இஸ்ரேலுக்கு வலியுறுத்து
- Tamil Malar (Reporter)
- 28 Nov, 2025
செய்தி - வெற்றி மைந்தன்
பாரிஸ், நவ. 28-
மேற்குக் கரையில் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய குடியேற்றவாதிகளால் பாலஸ்தீனிய மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள் வெகுவாக அதிகரித்துள்ளதை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு நான்கு முக்கிய ஐரோப்பிய நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளன.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐக்கிய அரபு ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், “பாலஸ்தீனிய பொதுமக்கள் மீதான இந்தக் காட்டுமிராண்டித் தாக்குதல்களை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இந்தத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தன.
மேற்குக் கரையில் ஏற்படும் இந்த அசாதாரண வன்முறை நிலைமையை மீட்டெடுக்காவிட்டால், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளும் நீண்டகால அமைதிக்கான வாய்ப்புகளும் பாழாகிவிடும் என்று அந்நாடுகள் எச்சரித்துள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



