விபத்தில் கணவர் பலி! மனைவி படுகாயம்!

top-news

மார்ச் 14,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மற்றொரு வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தைச் செலுத்திய கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரின் மனைவியும் மற்றொரு வாகனத்தில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்தனர். பிற்பகல் 2.45 மணிக்கு கோத்தா பாருவிலிருந்து திரங்கானு செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக Setiu மாவட்டக் காவல் ஆணையர் Mohd. Zain Mat Dris தெரிவித்தார்.

உயிரிழ்ந்தவர் 53 வயது Kamaruddin Jusoh எனும் மீனவர் என்றும் படுகாயம் அடைந்தவர்களில் அவரின் மனைவி என்றும் தெரிய வந்துள்ள நிலையில் மற்றொரு வாகனத்தில் பயணித்தவர் 20 வயது Izzat Afzan Efendy என்பவரும் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையை மேற்கொள்வதாக Setiu மாவட்டக் காவல் ஆணையர் Mohd. Zain Mat Dris தெரிவித்தார்.

Seorang nelayan maut manakala isterinya dan pemandu lain cedera parah dalam kemalangan di Jalan Kuala Terengganu – Kota Bahru. Proton Wira yang hilang kawalan merempuh kenderaan mangsa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *