முகைதீன் வீட்டில் நள்ளிரவில் நடந்த அவசரக் கூட்டம்! உற்சாகத்தில் MP-க்கள்!
- Shan Siva
- 19 Nov, 2025
கோலாலம்பூர், நவ 19: நேற்று இரவு முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் வீட்டில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து
கொண்ட பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், முகைதீனே கட்சித் தலைவராக நீடிக்க வேண்டும் என்ற தங்கள்
ஆதரவை மீண்டும் தெரிவித்துள்ளனர்.
பெர்சாத்து
வெளியிட்ட காணொளியில், கூட்டத்தில்
கலந்து கொண்ட 18 நாடாளுமன்ற
உறுப்பினர்கள் முகைதீனுக்கே ஆதரவு என்ற கோஷத்தை
எழுப்பினர்.
பெரிகாத்தான்
நேஷனல் தலைவரான முகைதீன், ராட்ஸிக்கும்
எதிர்க்கட்சித்தலைவரும், பெர்சாத்து
துணைத் தலைவருமான ஹம்சா ஜைனுதீனுக்கும் இடையில்
அமர்ந்திருந்தார்.
புக்கிட்
டாமன்சாராவில் உள்ள முகைதீனின் வீட்டிலிருந்து இரவு 11.19 மணியளவில் அவர்கள் வெளியேறத் தொடங்கினர்.
நவம்பர் 29 சபா மாநிலத் தேர்தல் மற்றும் கட்சியை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்ததாக சபாக்
பெர்னாம் நாடாளுமன்ற உறுப்பினர் கலாம்
சலான் செய்தியாளர்களிடம் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



