பெங்களூரில் பெண் ஒருவர் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்ததால் பரபரப்பு!

top-news
FREE WEBSITE AD

பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவர் சோப்பு வழுக்கி 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுக்கமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை
குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போதும், குழந்தைககள் விளையாடும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் மொட்டை மாடிகளில் நடக்கும் போதும், எட்டிப் பார்க்கும் போதும் எசசரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கும் வாய்ப்பு உள்ளது.

பெங்களூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவர் சோப்பு வழுக்கி 3வது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
கர்நாடக மநிலம் பெங்களூரு கனகா நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதாகும் ரூபா கடந்த ஜூன் 19ஆம் தேதி கணவருடன் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் சில பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே கிடந்த சோப்பின் மீது கால் வைத்துள்ளார்.

சோப்பின் மீது கால் வைத்த வேகத்தில் வழுக்கி மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழப் போனார். இதைக் கண்டு துரிதமாக செயல்பட்ட அவரது கணவர் ஓடிச் சென்று ரூபாவின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டார். இருப்பினும், சில விநாடிகளே அவரால் தனது மனைவியை தாங்கிக் கொள்ள முடிந்திருக்கிறது..

கண் இமைக்கும் நேரத்தில் ரூபா அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள் மீது விழுந்தார். இதில் ரூபாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட கணவர், ஆட்டோ மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரூபாவிற்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். தொடர்ந்து ரூபா மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக நிலை தடுமாறி மூன்றாவது மாடியில் இருந்து ரூபா கீழே விழுவதையும் அவரது கணவர் தாங்கிப் பிடிப்பதையும் அருகில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *