சரவாக்கில் ஃபோர்க்லிஃப்ட் பிளேடால் ஒருவர் மரணம்!

top-news
FREE WEBSITE AD

சரவாக், மார்ச் 16: : சரவாக், கூச்சிங்கில் உள்ள Pending தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று 70 வயது முதியவர் ஒருவர் ஃபோர்க்லிஃப்ட் பிளேடால் மார்பில் காயத்திற்கு இலக்காகி பலியானார்.

இச்சம்பவம் மாலை 4 மணியளவில் நிகழ்ந்த வேளையில், அந்த நபர் ஃபோர்க்லிஃப்டை இயக்கிக் கொண்டிருந்ததாக கூச்சிங் காவல்துறைத் தலைவர் ஃபர்ஹான் லீ அப்துல்லா தெரிவித்தார்.

இதனை அடுத்து Bintawa காவல் நிலையத்திலிருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மலேசியரான சம்பந்தப்பட்ட நபர் ஃபோர்க்லிஃப்ட்டுக்கும் பலகைகளின் அடுக்கிற்கும் இடையில் சிக்கிக் கொண்டதை அதிகாரிகள் கண்டதாக அவர் கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்த துணை மருத்துவர்கள் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியதாக ஃபர்ஹான் கூறினார்.

சம்பவம் குறித்து ஊகிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.

Seorang lelaki berusia 70 tahun maut  terhimpit di antara forklift dan timbunan papan di sebuah kilang di Pending, Kuching. Kejadian berlaku pada jam 4 petang ketika mangsa mengendalikan forklift. Pihak berkuasa mengesahkan kematian di tempat kejadian dan meminta orang ramai mengelak daripada membuat spekulasi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *