பந்திங்கில் ஒருவர் சுட்டுக் கொலை!
- Shan Siva
- 05 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 5: பந்திங்கில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று இரவு நடந்த ஒரு
சம்பவத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை போலீசார் இன்று உறுதிப்படுத்தினர். சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும்
வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை இரவு 10.05
மணியளவில் MERS 999 அவசர தொலைபேசி எண்
மூலம் துப்பாக்கிச் சூடு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கோலா
லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் அக்மல் ரிசால் ராட்ஸி தெரிவித்தார்.
காவல்துறையினர் உடனடியாக
சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு, இந்த சம்பவத்தில் ஒரு ஆண்
இறந்ததை உறுதிப்படுத்தினர்.
பாதிக்கப்பட்டவர் 30
வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பிரேத பரிசோதனைக்காக
பந்திங் மருத்துவமனைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன்
கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சம்பவத்தை நேரில்
பார்த்தவர்கள் அல்லது வழக்கு தொடர்பான தகவல்களைக் கொண்ட பொதுமக்கள் முன்வந்து
விசாரணைகளுக்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் மேலும்
கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



