ஒரு டன் அதிபயங்கர போதைப்பொருள் பறிமுதல்!
- Muthu Kumar
- 24 Sep, 2025
கோலாலம்பூர், செப். 24-
கிழக்கத்திய நாடொன்றிலிருந்து கிட்டத்தட்ட ஒரு டன் எடைகொண்ட “ஃபெண்டனைல்" போதைப்பொருளை மலேசியாவுக்கு கடத்தி வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியொன்று ஆகஸ்டு 19ஆம் தேதியன்று போலீசாரால் முறியடிக்கப்பட்டது.
அந்த போதைப்பொருளை அனைத்துலக கடத்தல் கும்பலொன்று கிள்ளான் துறைமுகம் வாயிலாக நாட்டுக்குள் கொண்டு வந்தது. அண்டை நாடுகளின் சந்தைகளுக்கும் உள்ளூர்ச் சந்தைகளுக்கும் அது அனுப்பப்படவிருந்தது என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் உசேன் ஒமார் மான் தெரிவித்தார்.
ஃபெண்டனைல் போதைப்பொருள் செயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்டது.அது மிகவும் அபாயகரமானது.மோர்ஃபின் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை விட அது நூறு மடங்கு அதிக வீரியம் கொண்டது என்றும் அவர் கூறினார்.
ஃபெண்டனைல் போதைப்பொருளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திய காரணத்தால் அமெரிக்காவிலும் கனடாவிலும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர் என்று ஷா ஆலமில் சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உசேன் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



