யாரும் எதிர்பார்க்காத புதிய கூட்டணி- பரபரப்பை கிளப்பும் டிடிவி தினகரன்!
- Muthu Kumar
- 08 Oct, 2025
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் களமிறங்கியுள்ளன.
அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. திமுக மற்றும் அதிமுக இடையே போட்டி என்ற நிலைமை மாறி தற்போது விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் பாஜக ஆட்சியை தமிழகத்தில் எப்படியாவது நிலைநாட்ட வேண்டும் என்று உறுதியாக உள்ளதால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.
அதேசமயம் சமீபத்தில் NDA கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் இணைப்பதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் திட்டவட்டமாக கூறியுள்ளனர். இந்நிலையில் தனது பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் கொடியை காட்டுவது, ஆதரவு போஸ்டர்களை ஒட்டுவது என இபிஎஸ் கூட்டணிக்காக முயற்சிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதனால்தான் மனதில் ஈரம் இல்லாமல் கரூர் துயரத்திற்கு அரசு மீது பழி போடுவதாகவும், நடுநிலையாக சொன்னால் கரூர் விவகாரத்தில் முதல்வர் பெருந்தன்மை உடன் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் யாரும் எதிர்பார்க்காத புதிய கூட்டணி அமையும் என டிடிவி தினகரன் சூசகமாக கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



