இராணுவ மரியாதையுடன் சிவசுதன் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது!

top-news

இராணுவ மரியாதையுடன் சிவசுதன் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது!

 

லுமுட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெஃப்டினன் தி. சிவசுதனின் நல்லுடல் இன்று மஞ்சோங் இந்து  சபா ஆசிரமத்தில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

முன்னதாக தாமான் செர்டாங் ஜெயாவில் நிகழ்ந்த இறுதி அஞ்சலிக்குப் பிறகு சிவசுதனின் நல்லுடல் காலை 11.30 மணிக்கு இந்து மயானத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

 

பின்னர் மதியம் 12.15 மணியளவில் சிவசுதனின் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.   

 

அரச மலேசிய கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் அவரின் இல்லத்தில் ராணுவ மரியாதை செலுத்தினர்.

SKUADRON 502 யூனிட்டின் விமானியாக பணியாற்றி வந்த சிவசுதனுக்கும், டாக்டர் ஹர்சினி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம்தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது!

 

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *