புத்தாண்டில் 17 பேர் கைது! 9,356 சம்மன்கள்! – ஜொகூர் காவல்துறை!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 1,

புத்தாண்டை முன்னிட்டு ஜொகூர் காவல்துறையினர் மேற்கொண்ட போக்குவரத்து சோதனை நடவடிக்கையில் 17 மோட்டார் சைக்கிளோட்டிகள் கைது செய்யப்பட்டதுடன் 9,356 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜொகூரின் 26 முதன்மை சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் மொத்தம் 23,763 வாகனங்களைச் சோதனையிட்டதாகவும் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 14 முதல் 46 வயதுடைய 17 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Rahaman Arsad தெரிவித்தார்.

மேலும் சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த வணிகக் கடைகளில் கூட்டமாக இருந்த 1,500க்கும் மேற்பட்டவர்களையும் அப்புறப்படுத்தியதாகவும் ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Rahaman Arsad தெரிவித்தார். பொதுமக்கள் பொது இடங்களைப் பயன்படுத்தும் போது சாலை போக்குவரத்து பயனர்களுக்கு நெரிசலை ஏற்படுத்த கூடாது என்பதால் அனுமதி மறுக்கப்பட்ட சாலையோரங்களில் இருந்த வணிகக் கடைகளை அப்புறப்படுத்தியதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Rahaman Arsad விளக்கமளித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 14 வயது சிறுவனின் குடும்பத்தினரைக் காவல்துறையினர் அழைத்திருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Rahaman Arsad தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *