30 ஆண்டுகள் பழமையான நகரங்கள் புதுப்பிக்க வேண்டும்! – KPKT அமைச்சர் உறுதி!
- Thinagaren Sanggaren
- 21 Aug, 2025
ஆகஸ்ட் 21,
நகரங்கள் மறுசீரமைப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக உள்ளாட்சி வீட்டு வசதி அமைச்சர் Nga Kor Ming இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இத்திட்டத்தை அமல்படுத்த முக்கிய சட்டங்களைத் திருத்தம் செய்ய வேண்டி இருப்பதால் இது குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் Nga Kor Ming விரிவான விளக்கம் அளித்தார். நகரங்களைப் புதுப்பித்தல் என்பது நகரவாசிகளை வெளியேற்றுவதாகப் பொருள்படாது என்றும் மாறாக அங்கு வாழும் மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அருகாமையில் அமைய வழிவகுக்கும் என்றும் Nga Kor Ming தெரிவித்தார்.
30 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான கட்டிடங்களை அடையாளம் கண்டு இந்த புதுப்பித்தல் மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும் என Nga Kor Ming தெரிவித்தார். நகரங்களில் 50% கட்டிடங்கள் கட்டப்பட்டு நிதி நெருக்கடியால் முழுமை அடையாளம் இருப்பதாகவும் சம்மந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளருக்குக் கட்டிடத்தை முழுமையாகக் கட்டி முடிக்கும்படியான உத்தரவை அரசு வழங்கும் என்றும் நிறுவனம் மறுத்தால், சம்மந்தப்பட்ட கட்டிடத்தை அரசு முழுமையாகக் கட்டியதும் அது அரசு பொதுமக்கள் சேவை அலுவலகமாக மாற்றும் எனும்படியான திட்டம் தான் இந்த நகரத் திட்டமிடல் மசோதா என Nga Kor Ming விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



