தெரு நாயை உயிருடன் தோலுரித்த பயங்கரம்! சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

- Muthu Kumar
- 26 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 26:
சபாவின் தவாவில் ஒரு தெரு நாயை உயிருடன் தோலுரித்ததற்கு காரணமான நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கு நலக் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
பெர்சத்துவான் ஹைவான் டெர்பியர் மலேசியா (SAFM) எனும் அந்தக் குழு இன்று ஒரு அறிக்கையில், குற்றவாளியை அடையாளம் கண்டு வழக்குத் தொடர வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.
ஒரு விலங்கை உயிருடன் தோலுரிக்கும் செயல் காட்டுமிராண்டித்தனமானது மற்றும் எந்த நாகரிக சமூகத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவ்வமைப்பின் தலைவர் கலைவாணன் ரவிச்சந்திரன் கூறினார்.
Sebuah kumpulan kebajikan haiwan, SAFM, menggesa tindakan segera terhadap individu yang menyiat kulit seekor anjing liar secara hidup-hidup di Tawau, Sabah. Ketua SAFM, Kalaivanan Ravichandran, menyifatkan perbuatan itu sebagai kejam dan tidak boleh diterima dalam masyarakat bertamadun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *