பகடிவதை தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும்! - அன்வார் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆக 20:  மாணவர்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பகடிவதை  வழக்குகள் தொடர்பாக ஒரு விசாரணை ஆணையத்தை  நிறுவுவதற்கான திட்டம் அமைச்சரவைக் கூட்டத்தில் கொண்டு வரப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த  உத்தேசத் திட்டத்தை பிரதமர் துறை சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒஸ்மான் சைட்  அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்வார் என்று அவர்  கூறினார்.

இது குறித்து அமைச்சரவையில் விவாதிப்போம் என்று இன்று நிதி அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு  செய்தியாளர்களிடம்
அவர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சித்திரவதை  வழக்குகளை விசாரிப்பதற்கு ஏதுவாக  விசாரணை ஆணையத்தை நிறுவ வலியுறுத்தும் பகடிவதை எதிர்ப்புச் சட்டத்தை இயற்றுவதன் அவசியத்தை அரசாங்கம் ஆராயும் என்று அசாலினா முன்னதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *