நெல் சாகுபடி ஊக்கத்தொகை விவகாரம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

top-news
FREE WEBSITE AD

நெல் சாகுபடிக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை தொடர்பாக தமிழக முதலமைமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை நிறுத்துமாறு மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாக மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், மத்திய அரசு அனுப்பிய தகவல் கட்டாய உத்தரவு அல்ல, அது ஒரு ஆலோசனை மட்டுமே என்று விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைதள பதிவில் அவர் கூறியதாவது, “நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். தமிழகத்திற்கு மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்ட பொதுவான ஆலோசனைக் கடிதம்தான் அது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிப்பதும், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிப்பதும் மத்திய அரசின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் தரும் மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேலாக மாநில அரசுகள் போனஸ் அல்லது ஊக்கத்தொகை வழங்குவது அவர்களது தனிப்பட்ட அதிகாரம் என்றும், அந்த அதிகாரத்தை மத்திய அரசு எவரிடமிருந்தும் பறிக்கவில்லை என்றும் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். மேலும், தேர்தல் அரசியலுக்காக விவசாயிகள் மத்தியில் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *