ஏ.ஆர்.முருகதாஸின் மதராஸி மற்றும் சிவகார்த்திகேயன் பற்றி அனிருத்!
- Muthu Kumar
- 05 Sep, 2025
சமீபத்தில் நடைபெற்ற மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனிருத், என்னுடைய இரண்டாவது படம் வெளியாகாத நிலையில் இந்த 20 வயது பையனை நம்பி கத்தி படத்தைக் கொடுத்தார் அதே சமயம் எனக்கு மான் கராத்தே, கத்தி என ஒரே சமயத்தில் கொடுத்தார் முருகதாஸ்.
நான் யானை அல்ல குதிரை டக்குனு எந்திரிப்பேன் அப்படின்னு சூப்பர் ஸ்டார் சொல்லியிருப்பார் அந்தக் குதிரை தான் முருகதாஸ். அதை மதராஸியில் நீங்க பார்ப்பீங்க. நானும் சிவகார்த்திகேயனும் ஒரே நேரத்தில் தொடங்கினோம். நான் 3 படம் பண்ணும் போதுதான் மெரினா வந்தது. 3 படத்தில் சின்ன ரோல் எஸ்கே பண்ணினார்.
என்னுடைய முதல் பிளாக்பஸ்டர் படமே எஸ்கேவின் எதிர்நீச்சல் தான். அன்றிலிருந்து எங்களுக்குள், நட்பு, சகோதரத்துவம் என உணர்வுப்பூர்வமான பயணமாக தொடர்கிறது. மதராஸியுடன் சேர்த்து 8 படங்கள் பணியாற்றியிருக்கிறோம். மனசு சுத்தமாக இருப்பதால் தான் அவர் வெற்றி பெறுகிறார். அவர் வெற்றியடைந்தால் நான் வெற்றி பெற்ற உணர்வு.
மதராஸி முருகதாஸ் ஸ்டைலில் சிவகார்த்திகேயனின் புதிய அவதாரமாக இருக்கும். இது என்னுடைய எஸ்கேடா நான் எப்பவுமே நிப்பேன்டா" என்றார். அனிருத் அப்படி சொல்லும் போது மேடைக்கு கீழே கண் கலங்கி எமோஷனல் ஆனார் சிவகார்த்திகேயன்.
இந்தநிலையில் இன்று சிவகார்த்திகேயன் முருகதாஸ் உடன் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கும் அனிருத், மதராஸி வெற்றி பெறும் என்பதை எமோஜிக்களாக பதிவிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



