பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்: முதலமைச்சர் விஜய் பங்கேற்பு
- Surendran Sumdraraj
- 11 Jun, 2026
புதுடெல்லி, ஜூன் 11 –
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் (NITI Aayog) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார். பதவியேற்ற பிறகு அவர் டெல்லிக்கு மேற்கொள்ளும் இரண்டாவது அதிகாரப்பூர்வ பயணமாக இது அமைந்துள்ளது.
நேற்று சென்னை நகரிலிருந்து டெல்லி புறப்பட்ட முதலமைச்சர் விஜய், மூன்று நாள் பயணத்தின் ஒரு பகுதியாக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்தின் வளர்ச்சி, மத்திய நிதி ஒதுக்கீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாநில நலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை முன்வைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
“விக்சித் பாரத் 2047-க்கான உள்ளடக்கிய மனித மேம்பாடு” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்து மாநில முதலமைச்சர்களும், யூனியன் பிரதேச நிர்வாகத் தலைவர்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, மனித வள வளர்ச்சி மற்றும் நீடித்த பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



