ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி! 5 லட்சத்தை இழந்த ஒப்பந்ததாரர்
- Shan Siva
- 08 Oct, 2025
கூலாய், அக் 8: பகுதி நேர வேலை வழங்குவதாகக் கூறிய ஒரு கும்பலால்
ஏமாற்றப்பட்டு ஒப்பந்ததாரர் ஒருவர் RM500,278 இழந்துள்ளார்.
52
வயதான அவர் 'இணை விற்பனையாளர்' எனப்படும் ஆன்லைன் அமைப்பு மூலம் வாங்கப்பட்ட ஒவ்வொரு
பொருளுக்கும் 15 சதவீத வருமானத்தை உறுதியளிக்கும் பகுதி நேர வேலை வாய்ப்பால்
ஈர்க்கப்பட்டதாக கூலாய் காவல்துறைத் தலைவர் ACP டான் செங் லீ தெரிவித்தார்.
மார்ச்
20 முதல் ஏப்ரல் 28 வரை, பாதிக்கப்பட்டவர்
வாக்குறுதியளிக்கப்பட்ட வருமானத்தைப் பெறுவதற்காக 16 உள்ளூர் வங்கிக்
கணக்குகளுக்கு மொத்தம் RM500,278
ரொக்கப் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார்.
இருப்பினும், பாதிக்கப்பட்டவர் வலைத்தளத்தின் கணக்கில் காட்டப்பட்ட
138,500 அமெரிக்க டாலர்
மதிப்புள்ள வருமானத்தைத் திரும்பப் பெற முயன்றபோது, அது தடுக்கப்பட்டிருப்பதைக்
கண்டறிந்ததாக இன்று ஓர் அறிக்கையில் டான் செங் லீ தெரிவித்தார்.
பின்னர்
தாம ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர், நேற்று (அக்டோபர் 7) கூலாய் காவல் தலைமையகத்தில் புகார் அளித்ததாகவும், மோசடிக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் வழக்கு
விசாரிக்கப்பட்டு வருவதாகவும் டான் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



