பலாபெஸ் படையில் அதிகமான பட்டதாரிகளை இணைக்க புத்தாக்க மாற்றம்!
- Muthu Kumar
- 05 Sep, 2025
செர்டாங், செப். 5-
பலாபெஸ் படையில் அதிகமான பட்டதாரிகள் இணையும் வகையில், அதிகாரிகளின் பயிற்சி, உள்ளடக்கம், பாடத்திட்டங்கள் அனைத்தும் மேம்படுத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
மலேசிய ராணுவப் படையில் பலாபெஸ் மாணவர்களின் பங்கேற்பு குறைவாக உள்ளதாகக் கூறிய அவர்,தற்போது அதில் நிரந்தர உறுப்பினர்கள் ஒரு லட்சத்து 21,000 பேரும், பலாபெஸ் மாணவர்களின் எண்ணிக்கை 34,000ஆக மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
"நாங்கள் கடினமாக உழைப்போம். ஆனால் அதை உடனடியாக அடைந்து விடுவோம் என்று நாங்கள் கூர்வில் பதில் அசீவி கேள்வி அமர்வில் நாம் கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்களை அடையாளம் காண முடிந்தது. பாடத்திட்டம், உள்ளடக்கம், அவர்கள் ஆர்வமாக இருக்கும் வகையில் ஆர்வத்தை எவ்வாறு வளர்ப்பது என்பதும் அதில் அடங்கும்," என்றார் அவர்.
நேற்று மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் அவ்வாறு கூறினார்.மேலும், உயர் தொழில்நுட்ப ராணுவ உபகரணங்கள், சொத்துடைமைகள் தொடர்ந்து மாற்றம் அடைந்து கொண்டே இருப்பதால், அவற்றை இயக்குவதற்கு ராணுவப் படைக்கும் கூடுதல் திறமை அவசியம் எனவும் காலிட் விவரித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



