கோலப்பிலா, உலு ஜூவாசே மகா முத்து கருமாரியம்மன் ஆலய வருடாந்திர திருவிழா!
- Muthu Kumar
- 08 Aug, 2025
(நாகேந்திரன் வேலாயுதம்)
கோலப்பிலா, ஆக.8-
நெகிரி செம்பிலானில், கோலப்பிலா எனுமிடத்தில், உலு ஜூவாசே கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா முத்து கருமாரியம்மன் ஆலயத்தின் 41 ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா மிக கோலாகலமாக அண்மையில் நடைபெற்றது.
ஆலயத் தலைவர் சிவசந்திரன் முன்னிலையில், ஆலயத் தலைமை குருக்கள் சிவஸ்ரீ ப.ஜே.குணாளன் குருக்கள் தலைமையில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அவ்வட்டார பக்தர்கள் புடைசூழ அன்று காலை தொடங்கி திருவிழா முடியும் வரையில், அனைத்து பூஜைகளிலும் கலந்துகொண்டு அம்பாளின் அருளாசி பெற்று சென்றனர்.
முன்னதாக அன்று காலை பக்தர்கள் பால்குடம் ஏந்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். மேலும் அன்றைய தினம் மாணவர்களின் கிராமிய நடனங்களுடன், விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்ற வண்ணமாய் இருந்தன.
இதனிடையே ஆலய நடவடிக்கைகளுக்கு மாநில அரசாங்கம் எல்லா காலகட்டங்களிலும் நல்லாதரவு வழங்கி வருவதாகவும், அதே வேளை ஆலய நடவடிக்கைகள் சமூக நலனை உட்படுத்திருக்க வேண்டும் என நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் கூறியதாக, அவரை பிரதிரிதித்து திருவிழாவுக்கு சிறப்பு வருகைப்புரிந்த வீரப்பனின் உதவியாளர் முரளி குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஆலயத் திருவிழா மிக விமரிசையாக நடைபெற உறுதுணையாகவும், ஆதரவு கரம் நீட்டியவர்களுக்கும், தொண்டூழியர்களுக்கும் ஆலய நிர்வாகம் சார்பாக அதன் செயலாளர் குணாளன் வடிவேலு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



