தென்னை மரத்தின் உச்சியில் மயங்கிக் கிடந்த முதியவர்!
- Shan Siva
- 07 Oct, 2025
பகாங், அக் 7: பகாங், தெமர்லோவில் உள்ள தாமான் ஜெயா 2 இல், 9 மீட்டர் உயரமுள்ள தென்னை மரத்தின் மேல் ஒரு முதியவர்
மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் குழுவால் மீட்கப்பட்டார்.
மீட்பு நடவடிக்கையில் 60 வயதுடையவர் என்று நம்பப்படும் அந்த நபரை பாதுகாப்பாக
தரைக்கு கொண்டு வர சுமார் 30 நிமிடங்கள் ஆனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயநினைவை இழப்பதற்கு முன்பு, அவர் வீட்டில்
தயாரிக்கப்பட்ட ஏறும் கருவிகளை சோதித்துப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று
காலை 11 மணியளவில் அவசர
அழைப்பு வந்ததாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மண்டலம் 2 தலைவர் முகமட்
சோப்ரி முகமட் சாலே கூறினார்.
பின்னர், தங்கள் குழுவினரால் அந்த நபர்
வெற்றிகரமாக கீழே இறக்கப்பட்டு, மேலதிக
சிகிச்சைக்காக மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



