மக்காவில் மேலும் ஒரு மலேசியர் மரணம்!

- Shan Siva
- 09 Jun, 2025
மெக்கா: மக்காவில் மற்றொரு மலேசிய ஹஜ் யாத்ரீகர் இறந்துள்ளார், இதன் மூலம் ஹஜ் பயணத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.
இறந்த அப்துல் மாலிக் சுடின் எனும் 62 வயது நபர் கிங் அப்துல்லா மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்தார்.
நேற்று இரவு சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் சீசன் நிறைவு விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத விவகாரத்துறை அமைச்சர் முகமது நயிம் இதனைத் தெரிவித்தார்.
இன்றுவரை, ஹஜ் புனித பயணம் சென்ற ஒன்பது மலேசிய யாத்ரீகர்கள் மாரடைப்பால் இறந்துள்ளனர், ஒருவர் பாக்டீரியா தொற்று மற்றும் உறுப்பு செயலிழப்பால் இறந்தார்.
Seorang jemaah haji Malaysia, Abdul Malik Sudin, 62 tahun, meninggal dunia akibat serangan jantung di Makkah. Jumlah kematian jemaah Malaysia kini meningkat kepada 10 sepanjang musim haji, menurut Menteri Hal Ehwal Agama, Muhammad Na’im.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *