மாணவனிடம் பாலியல் வன்கொடுமை ஆசிரியர் மீது மற்றொரு குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 28-

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாணவன் ஒருவனுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புரிந்ததாக இதற்கு முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கணிதப் பாட ஆசிரியர், மற்றொரு மாணவனிடமும் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மூவார் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி கைரி ஹரூண் முன்னிலையில் நேற்று குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், 52 வயதுடைய ரஸ்பி மேசான் என்ற அந்த ஆசிரியர் அதை மறுத்து விசாரணை கோரினார். கடந்த ஜூன் 30ஆம் தேதி காலை 11 மணியளவில் மூவாரில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் 14 வயதுடைய சிறப்புக் கல்வி மாணவனுக்கு எதிராக ரஸ்பி அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

2017ஆம் ஆண்டு சிறாருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படால், ரஸ்பிக்கு 20 ஆண்டுகள் வரைக்குமான சிறை மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம்.ரஸ்பியை 10 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவித்த நீதிமன்றம், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *