ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் மீண்டும் திடீர்குழி!
- Muthu Kumar
- 10 Nov, 2025
கோலாலம்பூர், நவ 10:
ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் இன்று திடீர்குழி ஏற்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.இதனை அடுத்து, கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL, ஜாலான் மஸ்ஜித் இந்தியாவின் சில பகுதிகளை வாகன போக்குவரத்துக்குத் தற்காலிகமாக மூடியுள்ளது.
காலை சுமார் 8.40 மணியளவில் பாம்பே நகைக்கடைக்கு முன்னால் இந்த சம்பவம் நடந்ததாக DBKL தெரிவித்துள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக, மசூதிக்கு அருகிலுள்ள லோரோங் மஸ்ஜித் இந்தியா 4 இலிருந்து பாதிக்கப்பட்ட பகுதி வரை, ஜாலான் மஸ்ஜித் இந்தியா தற்காலிகமாக வாகனப் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
DBKL, ஏர் சிலாங்கூர், இண்டா வாட்டர் கன்சோர்டியம் மற்றும் டாங் வாங்கி காவல்துறையைச் சேர்ந்த குழுக்கள் சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்தி வருவதாக அது தெரிவித்துள்ளது.பொது பாதுகாப்பு தங்கள் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்றும், கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் தொடரும் என்றும், அவ்வப்போது மேலும் புதுப்பிப்புகள் வழங்கப்படும் என்றும் DBKL தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி, 48 வயதான இந்திய சுற்றுலாப் பயணி ஜி விஜய லட்சுமி, ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட 8 மீட்டர் ஆழமுள்ள திடீர் குழியில் விழுந்து காணாமல் போனார்.கழிவுநீர் குழாய் அமைப்பில் ஏற்பட்ட ஒரு செயலிழப்பே அந்தக் குழிக்கான காரணம் என அடையாளம் காணப்பட்டது. இது இரசாயன எதிர்வினையால் அரிக்கப்பட்டு, மண்ணின் உறுதியற்ற தன்மையால் பாதிக்கப்பட்டது என்று அண்மையில் அறிக்கை வெளியிடப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



