மாணவர் தங்கும் விடுதிகளில் இனி CCTV

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 4: மாணவர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள 200 உறைவிடப் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை கல்வி அமைச்சு நிறுவும் என்று கல்வித்துறை தலைமை இயக்குநர் அசாம் அகமது தெரிவித்தார்.

பெரிய விடுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, தனிப்பட்ட பள்ளிகளின் தேவைகள் மற்றும் மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் RM3 மில்லியன் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று அசாம் கூறினார்.

கேமராக்களுக்கு ஏற்ற இடங்கள் குறித்து நிர்வாகம் நிபுணர் ஆலோசனையைப் பெறும் என்றும் அவர் கூறினார்.

கழிப்பறைகள் போன்றவற்றில் அவற்றை கண்மூடித்தனமாக நிறுவ முடியாது. மாணவர்களின் தனியுரிமையை மீற நாங்கள் விரும்பவில்லை என்று அவர் விளக்கினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *