மாணவர்களுக்கு ஆங்கில மொழி அறிவு அவசியம்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 10: நாட்டில் மாணவர்களிடையே ஆங்கிலப் புலமையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கல்வி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளார்.

நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், ஆங்கில மொழி  நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினார்.

ஆங்கிலப் புலமை மிகுந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றும், இந்த நாட்டிற்கு மிகவும் அவசியம் என்றும் சுட்டிக்காட்டிய அவர், கல்வி அமைச்சகம் ஆங்கிலப் புலமையின் அளவை மேம்படுத்த இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும்  என்று அவர் அம்பாங்க் குழுமத்தின் 50வது ஆண்டு விழாவில் தனது உரையில் கூறினார்.

மேலும் சீன, தமிழ், அரபு அல்லது பிரெஞ்சு போன்ற பிற மொழிகளில் சிறந்து விளங்கவும் மலேசயர்களுக்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்றும் அன்வார் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *