பண்டார் சௌஜானா புத்ரா போலீஸ் நிலையத் தலைவராக இன்ஸ்பெக்டர் தனேஸ்வரன் நியமனம்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

பந்திங், அக்.5-

பண்டார் சௌஜானா புத்ரா போலீஸ் நிலையத்தின் புதிய தலைவராக இன்ஸ்பெக்டர் தனேஸ்வரன் ஸ்ரீதரன் நியமனம் பெற்றார்.இதுகாறும் பண்டார் சௌஜானா புத்ரா போலிஸ் நிலையத்தின் தலைவராக பணியாற்றி வந்துள்ள ஏஎஸ்பி வான் அமாட் ஷக்கீர் வேறு இடத்திற்கு மாற்றலாகி செல்வதை முன்னிட்டு, அவருக்குப் பதிலாக இன்ஸ்பெக்டர் தனேஸ்வரன் அந்தப்பதவியில் அமர்த்தப்பட்டார்.

நேற்று முன்தினம், கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் படைத் தலைவர் சூப்ரிண்டன் முகமட் அக்மால்ரிஸால் ரட்சி முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு சடங்கில் இன்ஸ்பெக்டர் தனேஸ்வரன் அதற்கான அதிகாரப் பூர்வக் கடிதத்தை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

பதவியேற்பு சடங்கை வழிநடத்திய சூப்ரிண்டன் முகமட் அக்மால்ரிஸால்,பண்டார் சௌஜானா புத்ரா போலீஸ் நிலையத்தின் புதிய தலைவராக நியமனம் பெற்றுள்ள தனேஸ்வரனின் சேவை குறித்து தமது வாழ்த்துரையில் பாராட்டி பேசினார்.

அக்டோபர் முதல் தேதி அன்று புதிய தலைவராகப் பதவியேற்ற இன்ஸ்பெக்டர் தனேஸ்வரன், பண்டார் சௌஜானா புத்ரா போலீஸ் நிலையத்தின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருவதுடன் மக்கள் குடியிருப்பு ப் பகுதிகளில் வசிப்போருக்கும் இவ்வட்டார பொதுமக்களுக்கும் சிறந்த சேவைகளை வழங்கி அவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தி வருவார் என்று தாம் பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பதாக சூப்ரிண்டன் முகமட் அக்மால்ரிஸால் தமது உரையில் குறிப்பிட்டார்.

பந்திங் போலீஸ் நிலையத்தில் சேவையாற்றி பதவி உயர்வு பெற்றுள்ள இன்ஸ்பெக்டர் தனேஸ்வரனுடன் பணி புரிந்த சக போலீஸ் அதிகாரிகளும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *