இன்ஸ்பெக்டர் ஷீலா நீதிமன்றத்தில் ஆஜர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 12: கடந்த வாரம் ஒரு போலீஸ் அதிகாரியின் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்ததாக கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் ஷீலா மீது வழக்கு தொடரப்பட்டது.

குற்றப்பத்திரிகையின்படி, குற்றத் தடுப்பு ரோந்துப் பணியின் போது, ​​37 வயதான போலீஸ் அதிகாரி மல்விந்தர்ஜித் சிங் தீரத் சிங்கின் கடமைகளைச் செய்யவிடாமல் வேண்டுமென்றே தடுத்ததாக 37 வயதான ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமார், மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நவம்பர் 4 ஆம் தேதி  டாங் வாங்கியில் உள்ள ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில்ஒரு உணவகத்தில் இரவு 8.15 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடந்ததாகக் கூறப்படுகிறது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு, அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது RM10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்கிறது.

இந்நிலையில் நீதிமன்றம் ஒரு நபர் உத்தரவாதத்துடன் 6,600 ரிங்கிட் ஜாமீன் நிர்ணயித்து, வழக்கு விசாரணைக்காக ஜனவரி 20 ஆம் தேதியை நிர்ணயித்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *