RM 21 மில்லியன் போலி முதலீடு தொடர்பில் காப்பீட்டு முகவர் கைது!
- Shan Siva
- 20 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 20: RM21 மில்லியன்
நிதியை உள்ளடக்கிய ஒரு போலி முதலீட்டுத் திட்டத்தில் உடந்தையாக இருந்ததாக
சந்தேகத்தின் பேரில் ஒரு காப்பீட்டு முகவர் ஞாயிற்றுக்கிழமை வரை காவலில்
வைக்கப்பட்டுள்ளார்.
40 வயதுடைய சந்தேக
நபர் நேற்று இரவு 9 மணிக்கு
புத்ராஜெயாவில் உள்ள ஏஜென்சியின் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்த பின்னர் கைது
செய்யப்பட்டதாக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) வட்டாரம் தெரிவித்துள்ளது.
கிள்ளான்
பள்ளத்தாக்கில் உள்ள ஒரு நிறுவனத்தில் தங்கள் பணத்தை முதலீடு செய்ய 22 பேர் ஏமாற்றப்பட்டதாக அந்த வட்டாரம்
தெரிவித்துள்ளது.
2023 முதல் அந்தப்
பெண் போலி முதலீட்டுத் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
MACC புலனாய்வுப்
பிரிவின் மூத்த இயக்குனர் Zainul Darus கைது
செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



