ஜொகூர் மாநிலத்தில் தரவுத்தள மைய மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தீவிரம் பெறுகின்றன!
- Muthu Kumar
- 30 Jul, 2025
(கோகி கருணாநிதி)
ஜொகூர் பாரு, ஜூலை 30-
ஜொகூர் மாநிலத் தரவுத்தள மேம்பாட்டு பணிக்குழு இரண்டாம் கூட்டம் 2025 (ஜொகூர் மாநிலத் தகவல் மைய மேம்பாட்டுப் பணிக்குழு கூட்டம் எண் 2/2025) நேற்று நடைபெற்றது. இந்த முக்கியமான கூட்டத்தை ஜொகூர் மாநில அரசின் வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி நிர்வாக ஆணையத்தின் தலைவர், சாலே டத்தோ' முகமட் ஜஃப்னி முகமட் ஷுகோர் தலைமையிலான குழு நடத்தி வைத்தது.
கூட்டத்தில் ஜொகூர் மாநில வேலைப்பாடுகள், போக்குவரத்து, உட்கட்டமைப்பு மற்றும் தொடர்பாடல் ஆட்சிக்குழு தலைவர் ஃபாஸ்லி சலே மற்றும் தொழில்துறை, ஜொகூர் மாநில முதலீடு, வர்த்தகம், நுகர்வோர் விஷயங்கள் மற்றும் மனிதவள ஆட்சிக்குழு தலைவர் லீ டிங் ஹான் ஆகியோரும் இணைந்து தலைமையேற்றனர்.
கிரேட்டர் ஜொகூர் பாரு பகுதிகளில் தகவல் மையம் அமைக்கும் நோக்கில் புதியதாக ஏழு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இக்கூட்டம், மாநில அரசின் ஒருங்கிணைந்த, முழுமையான அணுகுமுறையை பிரதிபலிக்கின்றது. PLANMalaysia நிர்வாகத்தில் செயலாக்கப்படும் இந்தக் குழுவில், முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஜொகூர் (இன்வெஸ்ட் ஜொகூர்), உள்ளூராட்சி மன்றங்கள், நில அளவை மற்றும் கனிம அலுவலகம், ஜொகூர் நீர் ஒழுங்குபடுத்தல் நிறுவனம், மாநில பொருளாதாரத் திட்டத்துறை, இஸ்கண்டார் மேம்பாட்டு நிர்வாகம், மலேசிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம், ஜொகூர் சிறப்பு நீர்மம் நிறுவனம், ரான்ஹில் எஸ்.ஏ.ஜே. தேசிய மின் நிறுவனம் மற்றும் மாநில, மத்திய அரசின் பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தகவல் மையங்களை விரைவாக மட்டுமல்ல, பொறுப்புடைமை மற்றும் மாநில வளங்களை மதித்து, சுற்றுச்சூழலின் சமநிலையை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு முடிவில், மொத்தம் 42 தகவல் மைய திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது, ஜொகூர் மாநிலத்தின் பொருளாதாரத் திறனை நம்பும் உலகளாவிய முதலீட்டாளர்களின் உறுதியைப் பிரதிபலிக்கின்றது. இந்த மையங்கள் ஜொகூர், சிங்கப்பூர் பொருளாதார மண்டல திட்டம், ஜொகூர் டிஜிட்டல் திட்டம் மற்றும் தொழில்நுட்பமயமான மாநில மாற்றத் திட்டத்தின் தூண்களாக விளங்குகின்றன.
ஜொகூர் மாநிலம் தற்போது உலகளாவிய தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் பின்தங்கியதாக இல்லை. ஜொகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸியின் வலியுறுத்தலின்படி, உயர் தொழில்நுட்பங்கள், திறமை வாய்ந்த வேலைவாய்ப்புகள், சொத்துக்களின் மதிப்பேற்றம் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்துடன் இணைந்த பல்வேறு வளங்களை இம்மூலம் கொண்டுவருகிறது என டத்தோ ஜஃப்னி தெரிவித்தார்.
தகவல் மையங்களை நிறுவுவதற்காக கூலாய் ஐபிதெக் தொழிற்பகுதி, செனடாக் தொழிற்பகுதி மற்றும் பாசீர் கூடாங் தொழிற்பகுதி ஆகிய இடங்களில் முதலீட்டாளர்களுக்கு முக்கிய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவை பிரதான நெடுஞ்சாலைகள், உயர் மின் ஒளிபரப்பு வலையமைப்பு, முந்தைய நிலையிலுள்ள குடிநீர் மற்றும் மேல்நிலை உள்கட்டமைப்புகள், துறைமுகங்கள், சர்வதேச விமான நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகிலுள்ள இடங்கள் என்பதால் முதலீட்டாளர்களுக்கு பெரிய நன்மை தரக்கூடியவை.
தற்போது, 7,618 ஏக்கர் திட்டமிடப்பட்ட தொழில்துறை நிலம் தரவுத்தளங்களை உருவாக்குவதற்கு தயாராக உள்ளது. இதில் ஜொகூர் பாரு நகராட்சி, இஸ்கண்டார் புத்ரி நகராட்சி மற்றும் கூலாய் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள ஏ.எஸ்.எம் கிரீன், ரைசிங் கேட்வே, இஸ்கண்டார் ஹலால் ஹப், கோஸ்மோ, கேக் செங் மற்றும் ஐபிதெக் ஆகிய பகுதிகள் அடங்கும். குறிப்பாக ஜொகூர் வாஜிஸ்டிக்ஸ் குழுமம் மேம்படுத்தும் ஐபிதெக் பகுதியில் 600 ஏக்கர் நிலம் தகவல் மையத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜொகூர் பாரு நகராட்சி மற்றும் இஸ்கண்டார் புத்ரி நகராட்சிக்குள் புதிய தகவல் மையங்களுக்கு அனுமதி அளிப்பதை மாநில அரசு கட்டுப்படுத்தியுள்ளது. இது நகரத் திட்டமிடல் சமநிலையை பாதுகாப்பதற்கும், குடியிருப்புப் பகுதிகளில் நிலம் பயன்படுத்தும் மோதலை தவிர்ப்பதற்கும், உரிய இடத்தில் மட்டுமே அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜொகூர் தற்போது நாட்டில் முதன்மை தரவுத்தள முதலீட்டின் முன்னோடியாக அமைந்து வருகிறது. Tier 4 தரப்படுத்தல் பெற்ற தொழில்நுட்பங்கள், 'காற்று குளிரூட்டும் முறைமைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் ஆகியவை தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
தகவல் மையங்கள் அமைப்பதற்கான ஒப்புதல் செயல்முறை மிகவும் தெளிவானதும் தொழில்நுட்ப அடிப்படையிலானதும் ஆகும். ஒவ்வொரு விண்ணப்பமும் ஒலி கட்டுப்பாடு, வெப்ப கட்டுப்பாடு, கட்டட வடிவமைப்பு, மின்திறன், பேரழிவு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவையின் அடிப்படையில் பரிசீலிக்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் தொடக்கத்திலேயே ஜொகூர் முதலீட்டு நிறுவனம், 'PLANMalaysia G மற்றும் உள்ளூராட்சி" மன்றங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். இது ஒப்புதல் திட்டங்கள் அனைத்துக்கும் ஒத்திசைவாக இருக்கும். அனைத்து தகவல் மையங்களிலும் மறுசுழற்சி செய்யக்கூடிய மற்றும் இயற்கை
ஆற்றல்களைப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
ஜொகூர் ஒரு நிலைத்தன்மை கொண்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த எதிர்காலத்தை நோக்கி நகர்கிறது.மாநில மக்கள் இதன் முக்கிய பயனாளிகள் ஆக இருக்க வேண்டும். அனைவருக்கும் பொருத்தமான ஊதியம் மற்றும் புதிய திறன்களுக்கான பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.இது வெறும் கட்டடம் கட்டுவது அல்ல, ஒரு புதிய ஜொகூர் தகவல் தொழில்நுட்ப மையமாகவும், டிஜிட்டல் மாற்றத்திற்கான தேசிய முன்களமாகவும் உருவாக்கும் பயணமாகும்.
சரிவுக்களங்களுடன் கூடிய திட்டமிட்ட நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த முதலீட்டு நெறிமுறைகள் மற்றும் உறுதியான செயல் திட்டங்களுடன், 2030ஆம் ஆண்டுக்குள் ஜொகூர் தென்கிழக்காசியாவின் முன்னணி டிஜிட்டல் மையமாக மாறும். பழைய வழிமுறைகளால் நம்மால் முன்னேற முடியாது. புதிய தைரியம், தெளிவான திசையும், கொள்கை நிலைப்பாடும்,தேவைப்படும். ஆகையால் ஜொகூர் மாநிலம் நாடு முழுவதும் டிஜிட்டல் மாற்றத்தை வழிநடத்தும் முன்னோடியாக வளரும் என்பதை குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



