டெல்லி குண்டுவெடிப்பால் காஷ்மீரில் 200 இடங்களில் தீவிர சோதனை!
- Muthu Kumar
- 13 Nov, 2025
டெல்லியில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தில், தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி (ஜெ.ஐ.ஐ) உடன் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்புடைய 200க்கும் மேற்பட்ட இடங்களில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து விரிவான சோதனைகளை நேற்று நடத்தினர்.
அதேபோல சோபூர் மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படைகள் இணைந்து சோதனைகள் மேற்கொண்டனர். இந்த நடவடிக்கைகளின் போது முக்கிய ஆவணங்கள், கணினி மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை சுமார் 500 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். தேசவிரோதச் செயல்பாடுகள் மற்றும் தீவிரவாத நிதி ஆதரவு குறித்து மேலும் தகவல் கிடைக்குமா என்பதை மைய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



