இன்று அன்வார் எதிர்ப்புப் பேரணி- பொதுப்போக்குவரத்து வழக்கம்போல் செயல்படும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 26-

இன்று சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் அன்வார் எதிர்ப்புப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும், கேடிஎம்பி மற்றும் பிரசாரனா மலேசியா பெர்ஹாட் ரயில் நிலையங்கள் உட்பட அனைத்துப் பொதுபோக்குவரத்தும் வழக்கம்போல் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பானவர்கள் உட்பட அனைவரும் சுதந்திரமான முறையில் கூடும் உரிமையை மடானி அரசாங்கம் தற்காக்கிறது. நாடாளுமன்றத்தை மூடிவிடும் அளவுக்கு ஜனநாயகம் ஒடுக்கப்பட்ட ஒரு காலகட்டத்திற்கு நாம் மீண்டும் திரும்பக் கூடாது என்று தமது முகநூல் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் முக்கியமானது என்னவென்றால், நமது
பொதுப்போக்குவரத்து சீராக செயல்பட வேண்டும் என்பதுதான். வார இறுதிநாள்களில் பெரும்பாலோர் வெளியே செல்ல விரும்புவார்கள். அவர்களுக்கு இப்பேரணி இடைஞ்சலை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது என்றார். தலைநகரில் வாகன நெரிசலைக் குறைப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *