மோட்டார் வாகன பரிசோதனைக்கான கூடுதல் மையங்கள் அறிமுகம்!
- Muthu Kumar
- 17 Jul, 2025
புத்ராஜெயா, ஜூலை 17-
தனியார் வாகனங்களின் உரிமையை மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்காக, பி.பி.கே.எம் எனப்படும் மோட்டார் வாகன பரிசோதனைக்கான கூடுதல் மையங்களைப் போக்குவரத்து அமைச்சு அறிமுகப்படுத்தி உள்ளது.
புஸ்பாகோமில் ஏற்படும் நெரிசலை கையாளவும், வாகன உரிமையை மாற்றுவதற்கான பரிசோதனை மையங்களை அதிகரிக்கவும் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் ஒப்புதலுக்கு இணங்க 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த நிறுவனங்கள் மோட்டார் வாகன பரிசோதனை மையங்களை திறப்பதற்கு, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் விவரித்தார்.
பி5 அதாவது இந்த உரிமை மாற்றுவதற்கான பரிசோதனை மிகவும் எளிமையானது. இயந்திர எண் உள்ளிட்ட சில அம்சங்கள் மட்டுமே சோதனை செய்யப்படும். எனவே, இது மிகவும் எளிமையானது. எனினும், இச்சோதனை புஸ்பாகோமில் கனரக வாகனங்களின் சோதனையுடன் இணைய வேண்டும். அவற்றுக்கு வேறு தடங்கள் இருந்தாலும், அது புஸ்பாகோமில் நெரிசலை அதிகரிக்கிறது. அதனால்தான் இந்த சந்தையை அதிக நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்தோம். நிச்சயமாக இது பயனீட்டாளருக்குக் கூடுதல் பயனளிக்கும்", என்றார் அவர்.
இந்த வாய்ப்பு நிபந்தனைகளுடன் வழங்கப்படும் வேளையில், தனியார் மோட்டார் வாகனங்களைச் சோதனை செய்யும் பொருட்டு, இச்சேவையை வழங்கும் நிறுவனங்கள் இயக்க உரிமங்களை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களில் உள்ள அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



