நிலைத்தன்மையைப் பேண அணு ஆயுதம் இல்லாத மண்டலம் அவசியம்!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஆக. 12-

தென்கிழக்கு ஆசிய அணு ஆயுதம் இல்லாத மண்டல ஒப்பந்தத்தின் நெறிமுறைப்பத்திரத்தில் உடனடியாக கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்குமாறு அணு ஆயுத நாடுகளை மலேசியா வலியுறுத்துகிறது.

ஒரு முக்கியமான மைல்கல்லாக அந்நெறிமுறை கருதப்படுவதால், வட்டாரத்தின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் அதன் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும், வலுவான மற்றும் செயல்படுத்தக்கூடிய அணு ஆயுதம் இல்லாத மண்டலம் அவசியம் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய அணு ஆயுதம் இல்லாத மண்டல ஒப்பந்தத்திற்கான தனது உறுதிப்பாட்டை மலேசியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது.அணு ஆயுதம் இல்லாத நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் தாமதமின்றி
கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

வலுவான, அமல்படுத்தக்கூடிய அணு ஆயுதம் இல்லாத மண்டலம், வட்டார அமைதி, பரஸ்பர மரியாதை, நீண்டகால பாதுகாப்பின் முக்கிய தூணாக உள்ளது". என்றார் அவர். நேற்று, ஜொகூர் பாருவில் நடைபெற்ற ஆசியான் அணுசக்தி நிர்வாக வலையமைப்பின் 12ஆவது ஆண்டுக் கூட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றும்போது ஃபடில்லா அவ்வாறு கூறினார்.

அணுசக்தி குறித்து பேசிய, எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சருமான அவர், எதிர்காலத்திற்கான சுத்தமான, நிலையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த மின்சார விநியோகத்தை வழங்குவதில் சாத்தியமான விருப்பங்களில் ஒன்றாக அணுசக்தியின் பங்கை ஆராய அரசாங்கம் கட்டமைக்கப்பட்ட மதிப்பீட்டை செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *