சிலாங்கூர் மெந்திரி பெசார் பதவியைக் குறிவைக்கும் Nurul Izzah!

top-news

ஜூன் 14,


பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவராக அதிகப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்த Nurul Izzah Anwar அமைதியாக இருக்கமாட்டார் என்றும் அமைச்சரவையில் பொறுப்புகள் பெற முயற்சிப்பதை விடவும் மெந்திரி பெசார் பதவியை Nurul Izzah Anwar குறிவைப்பதாகவும் அரசியல் ஆய்வாளர் Ilham Centre நிர்வாக அதிகாரி Hisommudin Bakar தெரிவித்துள்ளார். இது என்னுடைய கணிப்பு மட்டும் தான், Nurul Izzah Anwar அதிரடி அரசியல் செய்பவர். அன்வாரைப் போல பொறுமையாக நகர்பவர் அல்ல என Hisommudin Bakar தெரிவித்துள்ளார். 

அன்வார் 25 ஆண்டுகள் அரசியல் செய்து பொறுமையாக ஆட்சியை அடைந்துள்ளார். அவரின் பொறுமை Nurul Izzahவுக்கு இல்லை. 1998 பி.கே.ஆர் கட்சியைத் தோற்றுவித்தது முதலே Nurul Izzah அதிரடியாக அரசியல் செய்து வருகிறார். அவரின் அதிரடியான அரசியல் செயல்பாடுகளால் ஆளுமைமிக்க Datuk Seri Rafizi Ramliயைத் தோற்கடித்து. பி.கே.ஆரின் வரலாற்றில் துணைத் தலைவராகப் பொறுப்பில் இருந்தவர்கள் ஆட்சியிலும் இருந்துள்ளனர். குறிப்பாக முன்னாள் துணைத் தலைவர்களான RAFIZI RAMLI பொருளாதார அமைச்சராகவும், AZMIN ALI சிலாங்கூர் மெந்திரி பெசாராகவும் இருந்துள்ளனர். இப்போது பி.கே.ஆரின் துணைத் தலைவராகப் பொறுப்பிலிருக்கும் Nurul Izzah Anwar சிலாங்கூர் மெந்திரி பெசாராவதற்கானக் காய்களை நகர்த்த தொடங்கியிருப்பதாகவும் காரணம் இப்போதைய சிலாங்கூர் மெந்திரி பெசார் Amirudin Shari நாடாளுமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதால், Amirudin Shari அமைச்சராகவும் Nurul Izzah Anwar சிலாங்கூர் மெந்திரி பெசாராகவும் பொறுப்பேற்க அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர் Ilham Centre நிர்வாக அதிகாரி Hisommudin Bakar தெரிவித்துள்ளார்.


Menurut penganalisis Ilham Centre, Hisommudin Bakar, Nurul Izzah Anwar dijangka mengintai jawatan Menteri Besar Selangor selepas menang besar sebagai Timbalan Presiden PKR. Beliau dilihat lebih agresif berbanding ayahnya Anwar dalam pergerakan politiknya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *