சுற்றுச்சூழல் அமைச்சர் பொறுப்புகள் ஜொஹாரி கனியிடம் ஒப்படைப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 12-

தோட்டத்துறை மற்றும் மூலப்பொருள் அமைச்சரான ஜொஹாரி கனி இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். இது உடனடியாக நடப்புக்கு வருகிறது.இரண்டு நாட்களுக்கு முன்னர் கூடிய அமைச்சரவை இதற்கு இணக்கம் தெரிவித்தது என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் நேற்று தெரிவித்தார்.

கடந்த மே மாதம் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நிக் நஸ்மி நிக் அமாட் விலகியதைத் தொடர்ந்து அப்பொறுப்புகள் ஜொஹாரி கனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவரான நிக் நஸ்மி செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அதே வேளையில், தித்திவங்சா நாடாளுமன்ற உறுப்பினரான ஜொஹாரி கனி அம்னோவின் உதவித் தலைவர் ஆவார்.

இதனிடையே, பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து ரஃபிஸி ரம்லி விலகியிருப்பதைத் தொடர்ந்து அப்பொறுப்பு இரண்டாம் நிலை நிதியமைச்சர் அமிர் ஹம்சாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பதின்மூன்றாவது மலேசியத் திட்டவரைவை சீரமைக்கும் பணியும் அவருக்கு வழங்கப்பட்டது. அந்த உத்தேச திட்ட அறிக்கை இம்மாதம் 31ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மே மாதம் நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில் அப்போதைய துணைத் தலைவரான ரஃபிஸியும் உதவித் தலைவர் நிக் நஸ்மியும் தோல்வி கண்டதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தத்தம் அமைச்சர் பதவிகளிலிருந்து விலகினர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *