பெரிக்காத்தானின் பேரணியினால் அன்வாரை வெளியேற்ற முடியாது-மூத்த பத்திரிகையாளர் காடிர் ஜாசின்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 21-

இம்மாதம் 26ஆம் தேதியன்று பெரிக்காத்தான் நேஷனல் நடத்தும் பேரணியினால் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசாங்கத்தைக் கவிழ்த்து விட முடியாது என்று பழம்பெரும் பத்திரிகையாளர் ஏ.காடிர் ஜாசின் கருத்துரைத்துள்ளார்.

அடுத்த பொதுத்தேர்தல் நடைபெறுவதற்குள் அன்வாரைக் கவிழ்க்க வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என எதிர்க்கட்சியினர் நிரூபிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அன்வாருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கும் வரையில் பேரணியினாலோ ஆர்ப்பாட்டத்தினாலோ கண்டன ஊர்வலத்தினாலோ அவரை பதவியிலிருந்து இறக்க முடியாது என்றார் அவர்.

ஜூலை 26ஆம் தேதியன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் "தூருன் அன்வார்' பேரணி அடுத்த பொதுத்தேர்தலுக்கான ஓர் ஆயத்த நடவடிக்கையாக இருப்பதற்கு மட்டுமே உதவும். ஆயினும், இதுபோன்ற பேரணிகளால் மக்களவையில் அன்வாரின் ஆதரவைக் குறைக்க முடியுமென்றால், அவரின் பெரும்பான்மை குறைய வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம்
ஏற்படலாம் என்றார் காடிர்.

பிரதமரைப் பதவி விலக வைப்பதற்கு கோலாலம்பூரின் மெர்டேக்கா சதுக்கத்தில் அப்பேரணி நடத்தப்படவுள்ளது. அதனை பெரிக்காத்தான் நேஷனல் ஏற்பாடு செய்துள்ளது. அதில் மூன்று லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதே கோரிக்கையை முன்வைத்து இம்மாத முற்பகுதியில் நடத்தப்பட்ட பேரணியில் முந்நூறு பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

தேர்தல் மூலம் அல்லாமல் பிரதமரை மாற்றுவது அசாதாரணமானதல்ல. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் அவரைப் பதவி நீக்கம் செய்ய முடியும் என்றார் காடிர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *