அமெரிக்காவுடனான உறவுகளை நிராகரிக்கும் சில தரப்பினரை கண்டித்த அன்வார்!
- Muthu Kumar
- 28 Sep, 2025
அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறும் 47வது ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதை கேள்வி எழுப்பும் விமர்சகர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டித்துள்ளார்.காசாவில் நடந்த அட்டூழியங்கள் உட்பட பாலஸ்தீனம் குறித்த கவலைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்த மலேசியா ராஜதந்திர தளத்தைப் பயன்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தைகளில் மலேசியா மூலோபாயமாக இருக்க வேண்டும், ஞானத்துடன் ராஜதந்திரத்தை பின்பற்றும் அதே வேளையில் உண்மை மற்றும் நீதியைப் பாதுகாப்பதில் உறுதியான நிலைப்பாட்டைப் பேண வேண்டும் என்று அவர் கூறினார்.
மலேசியா ஒரு பெரிய சக்தியாக இல்லாவிட்டாலும், உலக அரங்கில் நீதி மற்றும் கருத்து சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் அதன் நிலையான நிலைப்பாட்டின் காரணமாக சர்வதேச அளவில் மரியாதையை நம் நாடு பெறுகிறது என்று அன்வார் கூறினார்.
மலேசியா பாலஸ்தீனம் மற்றும் காசாவைப் பாதுகாப்பதில் வெளிப்படையாகப் பேசுகிறது. ஆனால் அதே நேரத்தில், நாங்கள் இராஜதந்திர வழிகளைப் பயன்படுத்துகிறோம். நண்பர்களை உருவாக்குவதில் நாம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.அதனால்தான் பேச்சுவார்த்தைகள் மிக முக்கியமானவை.நம் குரல் எப்போதும் உண்மையையும் நீதியையும் நிலைநிறுத்தும், ஆனால் புத்திசாலித்தனமாகவும் மூலோபாய ரீதியாகவும்," என்று அவர் இன்று சண்டகானில் உள்ள MMEA கடல்சார் மண்டல வளாகத்தில் மலேசிய கடல்சார் அமலாக்க அமைப்பின் (MMEA) 20வது ஆண்டு விழாவில் கூறினார்.
அமெரிக்காவுடனான உறவுகளை நிராகரிக்கும் சில தரப்பினரின் நிலைப்பாடு, மக்கள் மற்றும் நாட்டின் பொருளாதார நலன்களை, குறிப்பாக உயர் தொழில்நுட்ப ஏற்றுமதித் துறையில், புறக்கணிக்கிறது என்று அன்வார் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



