தாய்லாந்து பிரதமருக்கு அன்வார் வாழ்த்து!
- Shan Siva
- 08 Sep, 2025
கோலாலம்பூர், செப் 8: தாய்லாந்து தனது ஜனநாயகப் பயணத்தின் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் இத்தருணத்தில் தாய்லாந்து பிரதமர்
Anutin Charnvirakulலின் தலைமை மிக முக்கியமானதாக இருக்கும் என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அனுதினின் நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்த அன்வார், ஆசியானுக்குள்
பிராந்திய ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதில் தாய்லாந்துக்கு முக்கிய பங்கு உண்டு
என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த முக்கியமான தருணத்தில் தாய்லாந்தை வழிநடத்த பிரதமர் Anutin Charnvirakul தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று அவர் கூறினார்.
மக்களின் நலனை மேம்படுத்துவதில் நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர மலேசியா
எதிர்நோக்குவதாக அவர் இன்று முகநூலில்
பதிவிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



