மலேசியாவின் நிலையை அன்வார் மேம்படுத்தியுள்ளார்! - கைரி ஜமாலுதீன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 14: பிரதமர் அன்வர் இப்ராஹிம் பொருளாதாரத்தை நிலைப்படுத்தி, முதலீட்டாளர்களிடையே மலேசியாவின் நிலையை மேம்படுத்தியுள்ளார் என்று அம்னோவின் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சாதாரண மலேசியர்கள் இன்னும் அதன் பலன்களை உணரவில்லை என்றும் முன்னாள் சுகாதார அமைச்சருமான அவர் கூறியதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 5.3% வளர்ச்சி கண்டு, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரை விஞ்சியது. அதே நேரத்தில், ரிங்கிட் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டாலருக்கு எதிராக ஆசியாவின் சிறந்த நாணயமாகத் தனது நிலையைத் தக்கவைத்துக் கொண்டது! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *