அன்வாருக்கு இதைத் தவிர வேறு வழியில்லை! - ரஃபிஸி அவசர அட்வைஸ்
- Shan Siva
- 27 Nov, 2025
கோலாலம்பூர், நவ 27: பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது முன்னாள் அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் அகின் இருவரும் தங்கள் பெயர்களை நீக்க தொழிலதிபர் ஆல்பர்ட் டெய் மீது சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளர்.
அவ்வாறு செய்யத் தவறுவது டெய் கூறிய குற்றச்சாட்டுகளை மேலும் உறுதிப்படுத்தும்என்று அவர் ஒரு வீடியோவில் கூறினார்.
டெய் மீது நடவடிக்கை எடுக்கத் தவறுவது அன்வார் மற்றும் அவரது அரசாங்கத்தின் நம்பகத்தன்மையையும் பாதிக்கும் என்று ரஃபிஸி கூறினார்.
இந்த நேரத்தில், பிரதமரின் நம்பகத்தன்மைக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்க இதைவிட சிறந்த வழியை தான் காணவில்லை என்று சுட்டிக்காட்டிய ரபிஸி, அன்வார் விரைவில் டெய் மீது வழக்குத் தொடுப்பார் என்றும், அதை நீதிமன்றங்களின் முடிவிலேயே விட்டுவிடுவார் என்றும் நம்புவதாகக் கூறினார்.
சபாவில் நடந்ததாகக் கூறப்படும் சுரங்க ஊழலுடன் தொழிலதிபர் டெய்யை தொடர்புபடுத்திய பின்னர், சபாவின் சண்டகானில் டெய் மீது ஷம்சுல் தாக்கல் செய்த காவல்துறை புகாரைத் தொடர்ந்து ரஃபிஸியின் பரிந்துரை வந்துள்ளது.
ஒரு பேஸ்புக் பதிவில், மலாக்கா பிகேஆர் தலைவர் இந்தக் குற்றச்சாட்டுகளை பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கான "தீங்கிழைக்கும் சதி" என்றும், ஜனநாயக விரோத வழிகளில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சி என்றும் விவரித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



